வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடும் முறைகள் | Ways of worshiping at home by lighting a lamp
வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடும் முறைகள்
தீபம் ஏற்றும் திசை
🪔 கிழக்கு - அனைத்து துன்பங்களும் நீங்கும்.
🪔- மேற்கு - கடன் பிரச்சனை மற்றும் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
🪔 வடக்கு - திருமணத்தடை நீங்கும். கல்வி தடை நீங்கும்.
🪔தெற்கு - மரண பயம் இருக்கும். துன்பம் வரும். கடன் தொல்லை ஏற்படும்.
எண்ணெய்களும் அவற்றின் பலன்களும்
🪔 நெய் - கடன் தீரும். வருமானம் அதிகரிக்கும். நினைத்தது நடக்கும்.
🪔 நல்லெண்ணெய் - நோய்களைக் குணப்படுத்தும். நவக்கிரகங்களின் அருள் கிடைக்கும்.
🪔 தேங்காய் எண்ணெய் - மனதில் தெளிவைத் தரும்.
🪔 விளக்கு எண்ணெய் - புகழ் வரும். குல தெய்வ பாக்கியம் கிடைக்கும்.
🪔 வேப்ப எண்ணெய் - கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
🪔 இலுப்பை எண்ணெய் - உடலை வளமாக்கும்.
🪔 வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் - சகல செல்வங்களும் உண்டாகும்.
🪔 நெய் + வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் - செல்வம் பெருகும்.
🪔 விளக்கு எண்ணெய் + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணெய் + தேங்காய் எண்ணெய் - பராசக்தியின் அருள் கிடைக்கும். மந்திர சித்தி தரும். கிரக தோஷம் நீங்கும்.
வீட்டில் விளக்கு ஏற்றும் போது கடை பிடிக்கப்பட்ட வேண்டியவை
🪔 வாரத்திற்கு ஒரு முறையாவது விளக்கை சுத்தம் செய்யுங்கள்.
🪔 வீட்டில் சுமங்கலி பெண்கள் தீபம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.
🪔 விளக்கின் அனைத்து முகங்களிலும் தீபம் ஏற்றவும்.
🪔திருவிளக்கில் சந்தனம், குங்குமம் இட்ட பின்பே தீபம் ஏற்ற வேண்டும்.
🪔 விளக்கில் எப்போதும் எண்ணெய்க் குளம் போல் இருக்க வேண்டும்.
🪔 எக்காரணம் கொண்டும் தெற்கு திசை நோக்கி தீபம் ஏற்றக்கூடாது.
🪔 வீட்டில் காலை மாலை விளக்கேற்றுவது சகல சௌபாக்கியங்களையும் தரும்.
🪔 வீட்டில் விளக்கை வெறும் தரையில் வைக்காதீர்கள்.
